சங்கர் - ராமச்சரன் படம் இப்படித்தான் இருக்கும்.. அப்டேட் கொடுத்த கதாநாயகி கியாரா அத்வானி

movie shankar ram charan kiara advani
By Kathick Oct 15, 2021 01:40 PM GMT
Report

பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் புதிய படம் உருவாகிறது.

இதில் கதாநாயகனாக ராம் சரண் நடிக்க, கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வரும் நடிகை கியாரா அத்வானி சமீபத்தில் அளித்த பேட்டியில் இப்படம் குறித்து பேசியுள்ளார்.

இதில் " இது ஷங்கர் சாரின் படம். அவருடன் பணிபுரிவது எனக்கு பிடித்த ஒன்று. எனது கதாபாத்திரம் பற்றி சொல்ல முடியாது. ஆனால், போஸ்டரை வைத்து இது ஒரு அரசியல் படம் என சொல்வீர்கள்.

படத்தில் சர்ச்சையான விஷயங்கள் எதுவும் இல்லை. ஆனால், படத்தில் ஒரு அற்புதமான மெசேஜ் இருக்கிறது, அற்புதமான கதை இருக்கிறது. ஷங்கர் சாரின் ஸ்டைலில் இப்படம் அமையும்," எனத் கூறியுள்ளாராம்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US