பிரபல நடிகருடன் நடிகை கியாரா அத்வானி விரைவில் திருமணம்.. உறுதிசெய்த நடிகையின் காதலர்
நடிகை கியாரா அத்வானி
எம்.எஸ். தோனி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி. இப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் தற்போது வரை பிஸியான முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
நடிகை கியாரா அத்வானி மற்றும் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு காதலித்து வருகிறார்கள் என்று பாலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தது.
சித்தார்த் - கியாரா திருமணம்
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவிடம் காதலி கியாராவுடன் எப்போது திருமணம் என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்க்கு பதிலளித்த சித்தார்த், " நாங்கள் இருவரும் நீண்ட காலமாக எங்களுடைய எதிர்கால வாழ்க்கையை திட்டமிட்டு வருகிறோம். சரியான நேரும் வரும்போது எங்கள் எதிர்கால திட்டங்களை பற்றி நிச்சயமாக தெரிவிப்போம் " என்று பதிலளித்துள்ளார்.
இதன்முலம், கியாரா அத்வானியுடனானா திருமணத்தை உறுதி செய்துள்ளார் சித்தார்த். இந்த தகவல் தான் தற்போது பாலிவுட் திரையுலகில் டாப் செய்தியாகி வலம் வந்துகொண்டிருக்கிறது.

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
