33 வயதாகும் நடிகை கியாரா அத்வானியின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
கியாரா அத்வானி
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கியாரா அத்வானி. பல லட்சம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ள இவர் கடந்த 2014ஆம் ஆண்டு சினிமாவில் என்ட்ரி ஆனார்.
எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. இதன்பின் மகேஷ் பாபு நடிப்பில் தெலுங்கு வெளிவந்த பரத் எனும் நான் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா பக்கம் வந்தார்.
மேலும் தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் கேம் ஜேஞ்சர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

3 லட்சம் கொடுத்தா தான் வருவேன்.. இப்படிப்பட்ட நடிகைகளே தமிழ் சினிமாவுக்கு தேவையில்லை: அபர்ணதி மீது சுரேஷ் காமாட்சி புகார்
பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் சினிமாவில் பிஸியாக முன்னணி நடிகையாக வலம் வரும் கியாரா அத்வானியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு
33 வயதாகும் நடிகை கியாரா அத்வானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 43 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.மேலும் இவர் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 5 கோடி முதல் ரூ. 13 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் கியாரா அத்வானி, அதற்காக ரூ. 1.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால், இவை எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

Mahanadhi: அனைத்தையும் இழந்த விஜய்.. பேச வழியில்லாமல் தவித்த காவேரி.. மாமியார் மனம் மாறுமா? Manithan
