ஷாருக்கான் படத்தின் மூன்றாம் பாகம்.. நடிகை கியாரா அத்வானியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா
டான்
பாலிவுட் திரையுலகில் கிங் கான் என அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் 2006ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் டான். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார்.
மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவந்தது. இந்த இரண்டு திரைப்படங்களையும் பர்ஹான் அக்தர் இயக்கி, தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவுள்ளது. ஆனால், இப்படத்தில் ஷாருக்கானுக்கு பதிலாக ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கிறாராம். மேலும் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம்.
கியாரா அத்வானி சம்பளம்
டான் படத்தின் மூன்றாம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை கியாரா அத்வானி ரூ. 13 கோடி சம்பளமாக வாங்கவுள்ளாராம்.
பாலிவுட் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை கியாரா அத்வானி தற்போது தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தின் கதாநாயகியும் கியாரா அத்வானி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
