ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் கில்லாடி ஜோடிஸ் நடன நிகழ்ச்சி... யார் யார் போட்டியாளர்கள், வீடியோ இதோ
ஜீ தமிழ்
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று தான் ஜீ தமிழ்.
சன்-விஜய் டிவிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் ஜீ தமிழில் நிறைய வெற்றிகரமான சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அப்படி இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் ஒரு புதிய நிகழ்ச்சியின் புரொமோ வெளியாகியுள்ளது.
அப்படி என்ன ஷோ என்றால் கில்லாடி ஜோடிஸ் என்ற நடன நிகழ்ச்சி தான்.

புரொமோ
இந்த புத்தம்புதிய ஷோவை சீரியல் நடிகரான சஞ்சீவ் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.
இவர் பல வருடங்களுக்கு முன்பு நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.
முதலில் சஞ்சீவ் தொகுத்து வழங்குகிறார் என செய்தி வந்தது, இப்போது கில்லாடி ஜோடிஸ் நிகழ்ச்சியில் போட்டிபோடும் போட்டியாளர்கள் குறித்த புரொமோ வெளியாகியுள்ளது.
அதில் யார் யார் ஜோடியாக பங்குபெறுகிறார்கள், எத்தனை போட்டியாளர்கள் என்ற புரொமோ இதோ,