ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் விடாமுயற்சி.. கிங் ஆஃப் ஓப்பினிங் அஜித்
விடாமுயற்சி
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளிவரவுள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள இப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ளது.
இப்படம் கடந்த ஆண்டே வெளிவரும் என எதிர்பார்த்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. அதே போல் கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரசிகர்களுக்கு விருந்தாக ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் ரிலீஸ் தள்ளிப்போக, பிப்ரவரி 6ம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூரவமாக அறிவித்தனர்.
பண்டிகைக்கு படம் வரவில்லை என்றால் என்ன, நம் படம் வரும் நாள்தான் பண்டிகை என அஜித் இயக்குநர் மகிழ் திருமேனியிடம் கூறியுள்ளார். அதே போல் வருகிற பிப்ரவரி 6ம் தேதி கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு பண்டிகைதான் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
ப்ரீ புக்கிங்
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து மாஸ் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் இப்படம் வெளிவரவிருக்கும் நிலையில், உலகளவில் நடந்து வரும் ப்ரீ புக்கிங்கில் ரூ. 18 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இதில் தமிழ்நாட்டில் ரூ. 11 கோடி, வெளிநாடுகளில் ரூ. 4.7 கோடி, கர்நாடகாவில் ரூ. 1.7 கோடி, கேரளாவில் ரூ. 30 லட்சம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ. 30 லட்சம் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் மீண்டும் தான் கிங் ஆஃப் ஓப்பினிங் என நிரூபித்துள்ளார் அஜித்.