சுந்தர்.சி படத்தில் நடித்தது தான் நான் செஞ்ச பெரிய தப்பு.. கவர்ச்சி நடிகை கிரண்
இயக்குனராகவும், நடிகராகவும் பல்வேறு ஹிட் படங்கள் கொடுத்தவர் சுந்தர்.சி. அவர் இயக்கிய அன்பே சிவம் படத்தில் கிரண் ரத்தோட் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.
கிரணின் முதல் படம் ஜெமினி. அது ஹிட் ஆன நிலையில் அடுத்து பல்வேறு பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தது. கிளாமர் ஹீரோயின் என்ற அவரது இமேஜ் மாறுவதற்காக தான் அன்பே சிவம் படத்தில் தேர்வு செய்து நடித்தார்.
அதற்கு பிறகு ஒரு சில படங்களில் அவர் நடித்தாலும் ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் கிளாமராக ஒரு பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆட தொடங்கினார். திருமலை படத்தில் விஜய் உடன் வாடியம்மா ஜக்கம்மா என்ற பாடலுக்கு அவர் ஆடி இருந்தார்.
ஆம்பள படத்தில் நடித்தது தான் தப்பு
படத்தில் நடிக்காமல் நீண்ட நாட்கள் இருந்த நிலையில் சுந்தர்.சியிடம் பட வாய்ப்பு கேட்டாராம் கிரண். அதன் பிறகு தான் ஆம்பள படத்தில் ஒரு ரோலில் நடிக்க வைத்தாராம்.
"அந்த படத்தில் நான் செட் ப்ராப்பர்டி போல தான் இருந்தேன். அதில் நடித்தது நான் செய்த தவறு தான்" என சமீபத்திய பேட்டியில் கிரண் கூறி இருக்கிறார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
