திருமணமான சீரியல் நடிகை கிருத்திகாவிடம் Propose செய்த ரசிகர்.. அப்றோம் என்ன நடந்தது தெரியுமா
மெட்டி ஒலி தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கிருத்திகா அண்ணாமலை.
வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர் மரகதவீணை, பாசமலர், கல்யாண பரிசு, வம்சம் என பல ஹிட் சீரியல்களில் நடித்திருந்தார்.
சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட கிருத்திகா நடிப்புக்கு சில ஆண்டுகள் பிரேக் விட்டு அதன்பின் தற்போது பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்தார்.
அப்போது, கிருத்திகாவிடம் அவரது தீவிர ரசிகர் ஒருவர் 'என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?' என்று கேட்டுள்ளார்.
அதற்கு தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள கிருத்திகா 'இவர் என் மகன் சகோதரா' என அந்த கேள்விக்கு பொறுமையாக பதிலளித்துள்ளார்.
