3 நாட்களில் கிஸ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கிஸ்
நடன இயக்குநரும் பிரபல நடிகருமான சதீஷ், கிஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். லிஃப்ட், டாடா மற்றும் ஸ்டார் என தொடர்ந்து மக்களை என்டர்டெயின் செய்து வரும் நடிகர் கவின் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

மேலும் அயோத்தி படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடிக்க, மிர்ச்சி விஜய், விடிவி கணேஷ், ராவ் ரமேஷ், தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
வசூல்
கடந்த 19ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில், மூன்று நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் கிஸ் படம், இதுவரை உலகளவில் ரூ. 2.2 கோடி வசூல் செய்துள்ளது.

இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri