முதல் நாள் கிஸ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
கிஸ்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர் கவின். லிப்ட், டாடா, ஸ்டார் என தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வரும் கவின் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம்தான் கிஸ்.
நடன இயக்குநர் சதீஸ் கிருஷ்ணன் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். மேலும் மிர்ச்சி விஜய், விடிவி கணேஷ், ராவ் ரமேஷ், தேவயானி என பலரும் நடித்திருந்தனர்.

ஃபாண்டஸி ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில், கிஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
முதல் நாள் வசூல்
அதன்படி, நேற்று வெளிவந்த கிஸ் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 70 லட்சம் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சுமாரான ஓப்பனிங் என கூறுகின்றனர். இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    