கிழக்கே போகும் ரயில் பட நடிகர் சுதாகரா இது?- நடக்க கூட முடியாமல் டிவி நிகழ்ச்சிக்கு வந்த பிரபலம்
கிழக்கே போகும் ரயில்
பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம் கிழக்கே போகும் ரயில்.
இந்த படத்தின் நாயகனாக நடித்து மக்கள் மனதை வென்றவர் தான் சுதாகர். நாயகனாக மட்டுமில்லாமல் நகைச்சுசை நடிகராகவும் பல படங்களில் நடித்திருப்பவர், தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என கிட்டத்தட்ட 600 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் கிழக்கே போகும் ரயில் திரைப்படம் 100 நாட்களை கடந்து ஓடி பெரிய அளவில் வெற்றியை கண்டது.
ஹிட் படங்களை கொடுத்த சுதாகர் ஒரு கட்டத்தில் சினிமா பக்கமே காணவில்லை.
லேட்டஸ்ட் வீடியோ
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் சுதாகர் கலந்துகொண்டிருக்கிறார். அதில் அவர் நடக்க கூட முடியாமல் தள்ளாடும் நிலைமையில் வர ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகியுள்ளனர்.
எப்படி இருந்த சுதாகர் இப்படி மாறிவிட்டாரே என வருத்தம் அடைந்துள்ளனர் ரசிகர்கள்.