கிழக்கு வாசல் கிளைமாக்ஸ் போட்டோவில் இல்லாத ரேஷ்மா.. நடிகை சொன்ன அதிர்ச்சி காரணம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் சீரியலில் ரேஷ்மா முரளிதரன் ரேணு என்ற ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கி எட்டு மாதங்கள் மட்டுமே ஆகிறது.
இன்னும் 200 எபிசோடுகளை கூட தொடாத கிழக்கு வாசல் சீரியலை விஜய் டிவி தற்போது அவசரமாக முடிவுக்கு கொண்டு வருகிறது.
சமீபத்தில் கிளைமாக்ஸ் காட்சி ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில், அதன் போட்டோவில் நடிகை ரேஷ்மா இடம்பெறவில்லை.
ஒரு மாதமாக நான் நடிக்கவில்லை..
இந்நிலையில் நடிகை ரேஷ்மா இதுபற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். தான் ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடிக்கவில்லை என கூறி இருக்கிறார்.
இவர் சரியாக ஷூட்டிங் வராத காரணத்தால் தான் சீரியல் அவசரமாக முடிக்கப்படுகிறதோ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். கிளைமாக்ஸ் போட்டோவிலும் ரேஷ்மா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு சமீப காலமாக முக்கியத்துவம் குறைக்கப்பட்டுவிட்டது என்றாலும், இதில் நடித்த அனுபவம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒன்று என ரேஷ்மா பதிவிட்டு இருக்கிறார்.