10 நாளில் கோடியில் ஒருவன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த திரைப்படம் கோடியில் ஒருவன்.
ஆனந்த கிருஷ்ணன் இயக்கியிருந்த இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஆத்மீகா நடித்திருந்தார்.
கொரோனா தாக்கம் காரணமாக அரசு விதித்துள்ள, 50% சதவீதம் இருக்கைகளுடன், கடந்த 17ஆம் தேதி, கோடியில் ஒருவன் திரைப்படம் வெளியானது.
கடந்த வாரமும் வசூலில் பட்டையை கிளப்பிய கோடியில் ஒருவன் திரைப்படத்தின் 10 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, வெளியாகி கடந்த 10 நாட்களில் சுமார் ரூ. 10.02 கோடி வரை வசூல் செய்து மாஸ் காட்டியுள்ளது கோடியில் ஒருவன் திரைப்படம்.
கொரோனா தாக்கத்திற்கு நடுவே வெளியாகியுள்ள, கோடியில் ஒருவன் திரைப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினை பெற்றுள்ளது.