கோடியில் ஒருவன் திரைவிமர்சனம்

review vijay antony kodiyil oruvan aathmika
By Kathick Sep 18, 2021 10:30 AM GMT
Report

விஜய் ஆண்டனியின் நடிப்பில் ஆனந்தகிரிஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் கோடியில் ஒருவன். பல சிக்கல்களுக்கு பின் திரையரங்கம் திறக்கப்பட்டு, படங்கள் வெளியாகி வரும் நிலையில், அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட கோடியில் ஒருவன் திரைப்படம் தற்போது பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா..? இல்லையா..? வாங்க பார்க்கலாம்

கதைக்களம்

நடிகர் விஜய் ஆண்டனியின் தாயார், தனது மகனை ஐஏஸ் அதிகாரி ஆக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். தாயின் கனவை நனவாக்க சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வரும் விஜய் ஆண்டனி, Housing Board பகுதியில் குடியேறுகிறார். அந்த Housing Board பகுதியின் தரத்தையும், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த நினைக்கிறார்.

இதற்காக ஒரு சில விஷயங்களை செய்ய முயலும் விஜய் ஆண்டனி, வில்லன்களால் பிரச்சனைகளை சந்திக்கிறார். இதனை அவர் எப்படி எதிர்கொண்டார்? ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற தாயின் கனவை விஜய் ஆண்டனி நனவாக்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

நாயகன் விஜய் ஆண்டனி, ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போயுள்ளார். ஆக்‌ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகளில் சிறந்த விளங்கிய விஜய் ஆண்டனியின் நடிப்பு, காதல் காட்சிகளில் கொஞ்சம் போர் தான். நாயகி ஆத்மிகாவுக்கு, அதிகளவு காட்சிகள் இல்லாதது ஏமாற்றம்.

கே.ஜி.எப் வில்லன் ராமச்சந்திர ராஜு, உருவத்திலேயே பயமுறுத்தி வில்லத்தனத்திலும், ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரத்திலும் மிரட்டி இருக்கிறார். மேலும் சூப்பர் சுப்பராயன், சூரஜ், பூ ராமு ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள். விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்துள்ள திவ்ய பிரபா, நேர்த்தியாக நடித்துள்ளார்.

இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன், படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அதனை கையாண்டுள்ள விதம் சூப்பர். திரைக்கதை வேகத்தை கொஞ்சம் கூட்டி இருந்தால், படத்திற்கு இன்னும் பலம் சேர்ந்திருக்கும். ஹீரோ தோற்கும்படியான காட்சிகள் வைத்துள்ளது பாராட்டுக்குரிய விஷயம். நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. ஹரீஷ் அர்ஜுனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவு கச்சிதம்.

க்ளாப்ஸ்

விஜய் ஆண்டனி நடிப்பு

இயக்கம்

ஒளிப்பதிவு

வில்லன்கள் நடிப்பு

பல்ப்ஸ்

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகம் இருந்திருக்கலாம்

பாடல்கள்

மொத்தத்தில் கோடியில் ஒருவன் கமெர்ஷியல் ரசிகர்களுக்கு சூப்பர் டிரீட்..

3/5


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US