மீண்டும் இணைந்துள்ள கோலங்கள் சீரியல் நடிகைகள், என்ன விஷயம்... வைரலாகும் போட்டோ
கோலங்கள் சீரியல்
திருச்செல்வம் அவர்கள் இயக்கத்தில் தயாராகி ஒளிபரப்பான தொடர்களில் ஒன்று கோலங்கள்.
சன் டிவியில் 2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை 6 வருடங்களாக இந்த தொடர் படு ஹிட்டாக ஒளிபரப்பாகியது.
இப்போதும் இந்த சீரியலுக்கான ரசிகர்கள் அதிகம் தான். கோலங்கள் தொடர் மூலம் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்திருந்தார் நடிகை தேவயானி. அபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார்.
இவருக்கு அடுத்து பிரபலமான கதாபாத்திரம் என்றால் அது நீலிமா இசை கதாபாத்திரம் தான்.
வைரல் போட்டோ
இந்த நிலையில் கோலங்கள் சீரியல் புகழ் தேவயானி மற்றும் நீலிமா இசை இருவரும் ஒன்றாக அண்மையில் புகைப்படம் எடுத்துள்ளனர்.
அதைப்பார்த்ததும் ரசிகர்கள் கோலங்கள் சீரியல் கூட்டணி, 2ம் பாகமா என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால் கே.எஸ். அதியமான் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் தேவயானி மற்றும் நீலிமா இசை இருவரும் இணைந்து நடிக்கின்றனர். அப்பட படப்பிடிப்பில் தான் இருவரும் புகைப்படம் எடுத்துள்ளனர்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
