மீண்டும் இணைந்த கோலங்கள் சீரியல் பிரபலங்கள்.. முன்னணி டிவியில் ஒளிபரப்பாகும் புத்தம்புதிய சீரியல்
கோலங்கள் சீரியல் மூலம் வெள்ளித்திரையிலிருந்து, சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தேவயானி
இதன்பின் கொடி முல்லை, மஞ்சள் மகிமை, முத்தாரம், என பல டிவி சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார்.
மேலும் கடைசியாக ராசாத்தி எனும் சீரியலில் சில எபிசோட்கள் மற்றும் நடித்து வந்தார். இந்நிலையில் மீண்டும் நெடுந்தொடர் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார் நடிகை தேவயானி.
ஆம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் ' புது புது அர்த்தங்கள் ' சீரியல் மூலம் மீண்டும் தொலைகாட்சிக்கு வந்துள்ளார்.
இந்த சீரியலில் பல வருடங்கள் கழித்து மீண்டும் கோலங்கள் சீரியலில் தேவயானியுடன் இணைந்து நடித்த நடிகர் அபிஷேக் மீண்டும் இந்த சீரியலில் இணைந்து நடிக்கஉள்ளார்.
மேலும் இந்த சீரியலை மாஸ்டர் படத்தை தயாரித்த, தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தான் தயாரிக்கவுள்ளார் எனது குறிப்பிடத்தக்கது.