சண்முக பாண்டியன் கொம்பு சீவி படத்தின் முழு பாக்ஸ் ஆபிஸ் வசூல்... ப்ளாப்பா?
கொம்பு சீவி
பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்க கடந்த டிசம்பர் 19ம் தேதி வெளியான திரைப்படம் கொம்பு சீவி.
சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் புதுமுக நாயகி தார்னிகா நடிக்கிறார். சுஜித் ஷங்கர், கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசை.
தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதிகளைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கை பற்றி ஆதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் நகைச்சுவை கலந்து உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்
இந்த படத்தின் கதைக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் சண்முக பாண்டியன் இப்படம் மூலம் மக்களிடம் கொஞ்சம் ரீச் ஆகியுள்ளார். ஆனால் பெரிதாக பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் இல்லை, படம் மொத்தமாக ரூ. 3 கோடி வரை தான் வசூலித்துள்ளதாம்.
வசூல்படி பார்த்தால் படம் ப்ளாப் என கூறப்படுகிறது.
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri