சமந்தாவை பற்றி சர்ச்சை பேச்சு.. எழுந்த கடும் கண்டங்கள்! மன்னிப்பு கேட்ட அமைச்சர்
சர்ச்சை பேச்சு
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து அமைச்சர் கொண்டா சுரேகா கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
சமந்தா - நாக சைதன்யா விவாகரத்துக்கு தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர் ராவின் மகன் கே.டி.ராமாராவ்தான் காரணம் என அமைச்சர் கொண்டா சுரேகா கூறினார். இது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
எழுந்த கண்டங்கள்
ஒரு பெண்ணாக பொறுப்புள்ள பதவியில் இருக்கும் சுரேகா, இதுபோன்ற பொய்யான கருத்துகளை கூறக்கூடாது என நடிகர் நாகர்ஜுனா கண்டனம் தெரிவித்தார். நடிகைகளின் சொந்த வாழ்க்கை குறித்து அவதூறு பரப்புவது வெட்கக்கேடான செயல் என அமைச்சரை கடுமையாக சாடியிருந்தார் நாக சைதன்யா.
மேலும் தனது விவாகரத்து பரஸ்பரமாக எடுத்த முடிவு, அதில் எந்த அரசியல் சதியும் இல்லை என சமந்தா விளக்கம் அளித்திருந்தார்.
தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது தனது கருத்தை திரும்ப பெற்றார் கொண்டா சுரேகா. இதன்மூலம் இந்த விஷயத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் பேசியதில் "கே.டி.ஆர் குறித்து விமர்சனம் செய்யும் அவசரத்தில் நடிகை சமந்தா குறித்து வாய் தவறி பேசிவிட்டேன். எனது பேச்சால் சம்மந்தப்பட்டவர்களின் மனம் புண்பட்டதை அறிந்து வேதனை அடைந்தேன். நடிகை சமந்தா - நாக சைதன்யா குறித்த கருத்துக்கு மன்னிப்பு கோருகிறேன். ஆனால் கே.டி.ஆரின் குணம், செயல்பாடுகள் குறித்து விமர்சிப்பது மட்டுமே எனது நோக்கம்” என அமைச்சர் சுரேகா கூறியுள்ளார்.