கொன்றால் பாவம் திரைவிமர்சனம்
'கொன்றால் பாவம் தின்றால் போச்சு' என ஒரு பழமொழி உண்டு. அதில் இருந்து தான் இந்த படத்திற்கு டைட்டிலே வந்திருக்கிறது. ஒரு கொலையை சுற்றி தான் கதை இருக்கும் என டைட்டில் பார்க்கும்போதே எளிதில் கணிக்க முடியும்.
Aa Karaala Ratri என்ற கன்னட படத்தின் ரீமேக் தான் இந்த 'கொன்றால் பாவம்'. வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர்.
80களில் நடக்கும் இந்த படத்தின் கதையில் வரலக்ஷ்மி மற்றும் அவரது அப்பா சார்லி மற்றும் அம்மா ஈஸ்வரி ராவ் ஆகியோர் கிராமத்தில் வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள். அதிகம் வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் வரலக்ஷ்மிக்கு வறுமையில் இருந்து வெளியில் வந்து நன்றாக வாழ ஆசை, ஆனால் அதற்கு வழி தான் தெரியவில்லை.
அந்த நேரத்தில் அவர்கள் வீட்டுக்கு சந்தோஷ் பிரதாப் வந்து ஒரு இரவுக்கு மட்டும் தங்கிக்கொள்ள கேட்கிறார். அவரிடம் எக்கச்சக்க பணம், நகை இருக்கிறது. அவரை கொண்டு அதை எடுத்துக்கொள்ள வரலக்ஷ்மி நினைக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் மீதி கதை.
இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான படம் தான் இந்த கொன்றால் பாவம். படம் முழுக்க கதை பரபரப்பாக சென்றாலும், முதல் பாதியில் ஒரு சில இடங்களில் சலிப்பு வரத்தான் செய்கிறது.
சார்லி, ஈஸ்வரி ராவ் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். வரலக்ஷ்மியின் நடிப்பை சரியாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார் இயக்குனர் தயாள் பத்மநாபன். சந்தோஷ் பிரதாப் நடிப்பும் குறைசொல்ல முடியாத அளவுக்கு இருந்தது.
பேராசை என்ற ஒன்று மனிதனுக்கு வந்துவிட்டால் என்னவெல்லாம் நடக்கும் என காட்டி இருக்கிறது இந்த கொன்றால் பாவம்.
இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் கூறி இருக்கும் விமர்சனம் இதோ