மறைந்த நடிகர் விவேக்கின் பாராட்டுகளை பெற்ற சிவபூமி, காமெடி நடிகர் கொட்டாச்சியின் இயக்கத்தில் உருவான குறும்படம்

vivek kottachi short flim
By Jeeva Apr 26, 2021 06:23 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர் நடிகர் கொட்டாச்சி, இவர் தற்போது சிவபூமி என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.

  மேலும் இப்படத்தை பார்த்துவிட்டு மறைந்த நடிகர் விவேக் தனிப்பட்ட முறையில் கொட்டாச்சியை தொலைபேசியில் அழைத்து அவரை பாராட்டியுளளார்.

சிவபூமி குறும்படம் பற்றிய அலசல் 

சில வருடங்கள் முன் நடந்தவாறு அமைக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதையில் பூமாதேவி என்ற கதாபாத்திரம் முக்கிய கதாபாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளது.

அவரின் தாய் மற்றும் தந்தைக்காக அவர்கள் வசித்து வரும் இடத்தை சொந்தமாக வாங்க நினைக்கிறார் பூமாதேவி , பல வருட உழைப்பினால் அவர் அந்த இடத்தை கஷ்டப்பட்டு வாங்குகிறார்.

அந்த சந்தோஷ் கொஞ்ச நேரம் கூட நீடிக்காமல் அது அரசாங்கத்திற்கு சொந்தமான இடுகாட்டு நிலம் என்பது தெரியவருகிறது. இதனால் அவர்கள் குடும்பத்தோடு தங்களை எரித்துக்கொள்கின்றனர். 

 ஏழை மக்கள் தங்களின் வாழ்க்கையில் படும் கஷ்டங்கள் மற்றும் சொந்த வீடு வாங்க அவர்களின் வாழ்க்கையில் படும் ஏமாற்றங்கள் குறித்து இப்படத்தில் எதார்த்தமாக கூறியுள்ளார் கொட்டாச்சி.



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US