கொட்டுக்காளி இரண்டு நாட்களில் செய்த வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா
சூரி
தமிழ் சினிமாவில் காமெடியாக அறிமுகமாகி இன்று மாஸ் ஹீரோவாக மாறியுள்ளார் நடிகர் சூரி. விடுதலை படத்திற்கு பின் சூரியின் மாற்றத்தை கண்டு ரசிகர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
கொட்டுக்காளி
இதன்பின் வெளிவந்த கருடன் படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக மாறி கலக்கியிருந்தார். கருடன் படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து சூரி நடிப்பில் கடந்த 23ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தான் கொட்டுக்காளி.

G.O.A.T படத்தில் கேப்டன் விஜயகாந்த் வரும் காட்சி எப்படி இருக்கு தெரியுமா.. தளபதி விஜய் சொன்ன அதிரடி விமர்சனம்
முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான இப்படத்தை இளம் இயக்குனர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் சூரியுடன் இணைந்து மலையாள நடிகை அன்னா பென் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல் விவரம்
கலவையான விமர்சனங்களை பெற்று வரும் கொட்டுக்காளி திரைப்படம் இரண்டு நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 85 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
