கோவை குணாவின் உயிர் பிரிவதற்கு முன் நடந்த உருக்கமான சம்பவம்.. வெளியான தகவல்
கோவை குணா
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் கோவை குணா. இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த மிமிக்ரி கலந்த நகைச்சுவை அனைவராலும் ரசிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இவர் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்தவர்.
சமீபகாலமாக உடல் நிலை குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த கோவை குணா சிகிச்சை பலனின்றி மார்ச் 22-ம் தேதி உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மனைவி அளித்த பேட்டி
இந்நிலையில் கோவை குணாவின் மனைவி பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர்,' என்னுடைய கணவர் சில நாட்களாக உடல் நிலை குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் மருத்துவர்கள் ஆலோசனைப் படி மருந்துகள் எடுத்து வந்தார்".
"மருந்துகள் எடுத்தும் சரியாக வில்லை. கடைசியில் அவர் மகளின் மடியில் படுத்து கொண்டார். அப்போது அவருடைய உயிர் பிரிந்தது"என்று கூறியுள்ளார்.
சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை.. நடிகை பிரியா பவானி ஓபன் டாக்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
