63 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகை கோவை சரளா.. கடைசி வரை தனியாகத்தான் இருக்க வேண்டும் என பேச்சு
கோவை சரளா
நகைச்சுவையில் நடிகர்கள் மட்டுமே சாதிக்க முடியும் என இருந்த நிலையில், அதை உடைத்து நடிகர்களுக்கு இணையாக, ஏன் அவர்களை விட அதிகமாகவே நகைச்சுவையில் மக்களை மகிழ்விக்க முடியும் என சாதித்து காட்டியவர் ஆச்சி மனோரமா.
இவரை தொடர்ந்து நகைச்சுவையில் தனக்கென்று தனி இடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியவர் நடிகை கோவை சரளா. 1979ஆம் ஆண்டு தனது திரை பயணத்தை துவங்கிய இவர், இன்று வரை நீடித்து நிலைத்திருக்கிறார். சினிமாவில் பல சாதனைகள் செய்துள்ள நடிகை கோவை சரளா 63 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
திருமணம்
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து மிகவும் வெளிப்படையாக நடிகை கோவை சரளா பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது: "எனக்கு கல்யாணம் ஆகவில்லையென்று நான் கவலைப்படவே இல்லை. இப்ப கல்யாணம் பண்ணியவர்களை பார்த்து சிரிச்சிட்டு இருக்கேன். நான் சொன்னா கேட்க மாற்றீங்க. கல்யாணம் பண்ணிட்டால் மட்டும் கடைசி வரை புருஷன் கூடவேவா வரப்போறாரு. அவர் ஓடி போறாரோ, இல்லை செத்து போறாரோ? எப்படியும் ஒரு நாள் போகத்தானே போறார். கடைசியில் நாம் தனியாகத்தானே இருந்தாகணும்" என பேசியுள்ளார்.