எம்.ஜி.ஆர் செய்த விஷயம்.. கோயம்புத்தூர் முழுக்க ஃபேமஸ் ஆன நடிகை கோவை சரளா
கோவை சரளா
நகைச்சுவையில் பட்டையை கிளப்பும் நடிகைகளில் மிகம்முக்கியமாவர் கோவை சரளா. வடிவேலு, ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து இவர் செய்யும் நகைச்சுவைக்கு அளவே இல்லை.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வரும் இவருக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு. இந்நிலையில், பழைய பேட்டி ஒன்றில் எம்.ஜி.ஆர் குறித்து நடிகை கோவை சரளா பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
கோவை சரளா பேட்டி
இதில், பள்ளி படிக்கும்போது எம்.ஜி.ஆர் அவர்களை பார்ப்பதற்காக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார் கோவை சரளா. தினமும் எம்ஜிஆரை நேரில் பார்த்தால் போதும் என்பது மட்டுமே கோவை சரளாவின் நோக்கமாக இருந்துள்ளது. ஒரு நாள் கோவை சரளாவை அழைத்து, யார் நீ, என்ன படிக்கிற என எம்.ஜி.ஆர் கேட்டுள்ளார்.

தன்னைப்பற்றி கோவை சரளா கூற, உன்னுடைய வீட்டு முகவரி, பள்ளி முகவரியை கொடு என எம்.ஜி.ஆர் கேட்டுள்ளார். பின், அவர் படிக்கும் பள்ளிக்கு கடிதம் எழுதி, கோவை சரளாவின் பள்ளி செலவை எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனால் எம்.ஜி.ஆர் படிக்கவைக்கும் பெண் என அந்த பள்ளியில் மட்டுமின்றி கோயம்புத்தூர் முழுக்க ஃபேமஸ் ஆகிவிட்டாராம் கோவை சரளா.