குக் வித் கோமாளி பிரபலம் பாலா 10வது வகுப்பில் இவ்வளவு மதிப்பெண்ணா?- வியந்து பார்க்கும் ரசிகர்கள்
சில கலைஞர்களை பார்த்தால் மக்கள் அவர்கள் இந்த தொலைக்காட்சி பிரபலங்கள் என சரியாக கூறி விடுவார்கள்.
அப்படி விஜய் தொலைக்காட்சிக்கு என்று சில முகங்கள் அதாவது கலைஞர்கள் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் KPY பாலா, எந்த நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டாலும் இவர் வந்துவிடுவார்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை விட அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம். என்னா டைமிங் காமெடி, அவர் அடித்த காமெடிகளை நிகழ்ச்சியில் பார்த்தவர்கள் கண்டிப்பாக இவர் பெரிய லெவலில் வர வேண்டும் என்று மனதார பாராட்டி வருகிறார்கள்.
இப்படி தொலைக்காட்சிகளில் காமெடி செய்துகொண்டிருக்கும் பாலாவின் 10வது வகுப்பு மதிப்பெண் விவரம் புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த மக்கள் நம்ம பாலா இவ்வளவு மதிப்பெண்ணா என வியந்து பார்க்கின்றனர்.
அவர் 10வது வகுப்பில் 500க்கு 490 மதிப்பெண் எடுத்துள்ளார்.