கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுகிறேனா- KPY பாலா ஓபன் டாக்
KPY பாலா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிறைய நிகழ்சசி மூலம் தங்களது திறமைகளை வெளிக்காட்டி இப்போது வெள்ளித்திரையில் கலக்குபவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அப்படி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் காமெடி செய்து, ரைமிங காமெடிகள் செய்து தனித்துவமாக காணப்பட்டவர் தான் KPY பாலா.
அந்நிகழ்ச்சியை தொடர்ந்து அவருக்கு குக் வித் கோமாளி ஷோ மிகப்பெரிய ரீச் கொடுத்தது, அவர் இல்லாத இந்த சீசன் கொஞ்சம் போர் அடிப்பதாக ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
பாலா ஓபன் டாக்
தான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து பலருக்கும் உதவிகள் செய்துவரும் பாலா கறுப்பு பணத்தை வைத்து வெள்ளையாக மாற்றுகிறார் என்ற பேச்சும், அவர் பின்னால் வேறு யாரோ இருக்கிறார்கள் என்ப பேச்சும் அதிகம் வருகிறது.
இதுகுறித்து பாலா அண்மையில், என்னால் முடிந்தது சம்பாதிப்பது மட்டும் தான். ஒரு சிலர் சொல்வதை போல என் பின்னால் யாருமில்லை. என் பின்னால் இருப்பது கஷ்டங்கள், வெட்கம், அடி, வலி ஆகியவை மட்டும் தான். இதற்கடுத்து எனக்கு தோள் கொடுப்பது நடிகர் லாரன்ஸ் அண்ணன் தான்.
மேலும் சிலர் கூறுவது போல் கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக நான் மாற்றவில்லை. வெயிலில் நின்று நான் கருத்த பணத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்கிறேன் என அவரது ரைமிங் ஸ்டைலில் கூறியுள்ளார்.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
