எனக்கு ஜோடியாக நடிக்க மறுத்தார்கள், ஓபனாக கூறிய KPY பாலா
KPY பாலா
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர், அதில் ஒருவர் தான் KPY பாலா.
ஒன்லைன் நகைச்சுவையால் பிரபலமான இவர் சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் கலக்க தொடங்கியுள்ளார்.
தனது திறமையால் வேலை செய்து அதில் கிடைக்கும் பணத்தை சமூகப் பணிகளுக்காக செலவு செய்ய அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.
மலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பலருக்கு உதவுவது என ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்.
திரைப்படம்
கடந்த 2018ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜுங்கா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின் புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தார்.
இப்போது பாலா கதாநாயகனாக காந்தி கண்ணாடி என்ற திரைப்படம் நடித்துள்ளார், வரும் செப்டம்பர் 5ம் தேதி படம் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் நிகழ்ச்சி மேடையில் பாலா பேசும்போது, நான் பல படங்களில் காமெடியனாக நடித்தேன், அந்த காட்சிகள் எல்லாம் படத்தில் இடம்பெறவில்லை.
காந்தி கண்ணாடி படத்தில் நாயகனாகிவிட்டேன், ஆனாலும் 50 ஹீரோயின்கள் எனக்கு ஜோடியாக நடிக்க மறுத்தார்கள் என கூறியுள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
