மக்களுக்காக நன்மைகள் செய்யும் KPY பாலாவின் மிகப்பெரிய கனவு நிறைவேறியது.. வீடியோ இதோ
KPY பாலா
சின்னத்திரையின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர்களில் ஒருவர் KPY பாலா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் நகைச்சுவை செய்து வந்தார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டையை கிளப்பிய பாலாவிற்கு பட வாய்ப்புகளும் வந்தது. விஜய் டிவியில் கவுண்ட்டர் கிங் என அழைக்கப்படும் இவர் தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறார்.
பண உதவி, ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது போன்ற பல நல்ல விஷயங்களை செய்து தனக்கென்று தனி இடத்தை மக்கள் மத்தியில் பிடித்துள்ளார். தற்போது பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
கனவு நிறைவேறியது
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியது என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் நடன புயல் பிரபு தேவாவுடன் பாலா நடனமாடுகிறார்.
இதுதான் அவருக்கு மிகப்பெரிய கனவாக இருந்ததாம். வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு பிரபு தேவாவுடன் மேடையில் நடனமாடி அசத்தியுள்ளார் பாலா. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
