6 மணிநேர நிகழ்ச்சிக்கு 1 ரூபாய் கூட வாங்காமல் தொகுத்து வழங்கிய மணிமேகலை... யாருடைய படம் தெரியுமா?
மணிமேகலை
மணிமேகலை, தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் தொலைக்காட்சி மூலம் தனது தொகுப்பாளினி பயணத்தை தொடங்கியவர்.
அந்த தொலைக்காட்சியில் வெளியே வந்தவர் அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தார், தொகுப்பாளினி, போட்டியாளர், கோமாளி என பன்முகம் காட்டினார்.
ஆனால் கடைசியாக ஒளிபரப்பாகி முடிந்த குக் வித் கோமாளி சீசனில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனையால் மொத்தமாக விஜய் டிவியில் இருந்தே வெளியேறிவிட்டார்.
ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் இப்போது வேறொரு புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
சம்பளம்
எந்த ஒரு நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கினாலும் சம்பளம் பெறுவது வழக்கம் தான்.
ஆனால் சமீபத்தில் 6 மணி நேரம் நடந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவை சம்பளமே வாங்காமல் தொகுத்து வழங்கியுள்ளார்.
அது வேறு யாருடைய படமும் இல்லை, பாலா நடித்துள்ள காந்தி கண்ணாடி படத்தின் இசை வெளியீட்டை தான் சம்பளம் இல்லாமல் நடத்தியுள்ளார். இந்த விஷயத்தை பாலாவே கூறியுள்ளார் மணிமேகலைக்கு நன்றி கூறியுள்ளார்.