மலை கிராம மக்களுக்காக இலவச ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்த KPY Bala- வாழ்த்தும் மக்கள், வீடியோ இதோ
KPY பாலா
பாலா விஜய் தொலைக்காட்சியின் சொத்து, இப்போதெல்லாம் எந்த ஒரு நிகழ்ச்சியும் இவர் இல்லாமல் இல்லை என்று தான் கூற வேண்டும்.
அந்த அளவிற்கு தனது ரைமிங் காமெடிகள் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.
டிவி நிகழ்ச்சி மட்டுமில்லாது தனியார் மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார்.
இப்போது பாலா செய்துள்ள ஒரு நல்ல விஷயத்தால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
வைரலாகும் வீடியோ
ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்து குன்றி உட்பட 18 மலை கிராமத்தில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக பல கிலோ மீட்டர் தாண்டி வந்துதான் சிகிச்சை மேற்கொள்ள முடிகிறது.
குன்றி உட்பட 18 மலை கிராம மக்களின் மருத்துவ அவசர உதவி காலத்தில் பயன்படும் வகையில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச ஆம்புலன்ஸ் வழங்க திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் பாலாவின் சொந்த நிதியின் மூலம் ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டு அதன் தொடக்க விழா ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
காரில் சென்றபோது விபத்தில் சிக்கிய முத்தழகு சீரியல் நடிகை வைஷாலி- காயங்களுடன் அவரே வெளியிட்ட வீடியோ

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri
