இரவு பகலா உழைத்து சம்பாதிக்கிறேன், அப்படி என்றால் ஆம்புலன்ஸ் எப்படி ஓடும்..தன்மீது வந்த குற்றச்சாட்டுக்கு KPY பாலா
KPY பாலா
இந்த உலகில் நல்லது இருக்கிறது என்றால் இன்னொரு பக்கம் கெட்டதும் உள்ளது.
அப்படி தான் நல்லது செய்த ஒரு பிரபலம் குறித்து தற்போது நிறைய மோசமான விமர்சனங்கள் பரவி வருகிறது.
KPY பாலா, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் இப்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக களமிறங்கி காந்தி கண்ணாடி என்ற படம் நடித்துள்ளார்.
சினிமாவில் தான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ஆனால், பாலா வெளிநாட்டு கைக்கூலி, அவர் கொடுத்த எல்லா ஆம்புலன்ஸும் போலியானவை, அவைகளுக்கு எல்லாம் இன்சூரன்ஸ் என்பது இல்லை.
அவருக்கு பின்னால் சர்வதேச வில்லன்கள் எல்லாம் உள்ளார்கள் என்று தெரிவித்திருந்தார்.
பாலா விளக்கம்
இதுகுறித்து பாலா கூறுகையில், என்னை சர்வதேச கைக்கூலி என்று எல்லாம் பேசி வைத்துள்ளார்கள், அது எனக்கே அதிர்ச்சியாக உள்ளது.
நான் வண்டி வாங்கி கொடுக்கிறேன் என்றால் அதை அவர்கள் பெயரில் மாற்றிக் கொள்வார்கள், அதனால் நம்பரை மறைத்து கொடுக்கிறேன்.
நான் வாங்கிக் கொடுத்த அனைத்து ஆம்புலன்ஸ்களும் நன்றாக இயங்கிக் கொண்டுள்ளது. தவறான நம்பர் என்றால் ஆம்புலன்ஸ் எப்படி ஓடும்.
இதுவரை நான் செய்த அனைத்து உதவிகளையும் எனது சொந்தக் காசில், நான் சம்பாதிப்பதை கொண்டுதான் செய்து வருகிறேன். சர்வதேச கைக்கூலி என்றால் கூட எனக்கு என்னவென்று தெரியாது என பேசியுள்ளார்.

ட்ரம்ப் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்த இளவரசி கேட்டை முறைத்த ராணி கமீலா? இணையத்தில் வைரலாகும் செய்தி News Lankasri
