தனது பிறந்தநாளில் முதியோர்களுக்கு KPY பாலா கொடுத்த அருமையான Gift- வாழ்த்தும் ரசிகர்கள்
KPY பாலா
கலப்பபோவது யாரு நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் KPY பாலா. அதன்பிறகு குக் வித் கோமாளியில் கலந்துகொண்டு டைமிங் காமெடிகளால் மக்களை மகிழ்வித்து வந்தார்.
இப்போது தொகுப்பாளராக விஜய் தொலைக்காட்சியிலும், தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பிஸியாக இருக்கிறார்.
பாலா தனது சொந்த செலவில் சிறுவர்கள் படிக்க பண உதவி செய்வது, பெரியவர்களுக்கு உதவி செய்வது நிறைய விஷயங்கள் செய்கிறார்.
அண்மையில் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாவா லட்சுமணன் அவர்களை நேரில் சந்தித்து பண உதவி செய்தார்.

பிறந்தநாள் பரிசு
பாலா தனது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியுள்ளார். அன்று தனது 5 ஆண்டுகால கனவாக இருந்த முதியோர் இல்லத்திற்காக ஆம்பிலன்ஸ் வாங்கித் தந்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் பாலா வெளியிட அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார் என்று தெரிகிறதா?- அவர் இவர்தானா?
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan