KPY பாலா திருமணத்தில் வந்த சிக்கல்! எல்லா பணத்தையும் இப்படியே செலவு செஞ்சா..
விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடியனாக கலக்கி பாப்புலர் ஆனவர் KPY பாலா. அவர் விஜய் டிவியின் கலக்க போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட பல ஷோக்களில் பங்கேற்றவர்.
தற்போது விஜய் டிவியில் இருந்து விலகி படங்கள் மற்றும் youtube ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
பாலா சமீப காலமாக தான் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் ஏழைகளுக்கு உதவ செலவிட்டு வருகிறார். சென்னை வெள்ளத்தில் தன்னிடம் இருந்த பணத்தை பிரித்து வீடு வீடாக சென்று கொடுத்தார்.
மேலும் மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, வறுமையில் இருப்பவருக்கு ஆட்டோ வாங்கி கொடுப்பது, பைக் வாங்கி கொடுப்பது என பல விஷயங்கள் செய்து வருகிறார்.
திருமணத்தில் பிரச்சனை?
பாலா ஒரு பெண்ணை காதலித்து வருகிறார் என்றும், அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்றும் முன்பே தகவல் வெளியானது. ஆரம்பத்தில் பெண் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்கின்றனர், ஆனால் தற்போது தயக்கம் காட்டுகிறார்களாம்.
ஒரு நடிகருக்கு சில காலத்திற்கு தான் வாய்ப்புகள் கிடைக்கும், அப்போதே சேர்த்து வைத்தால் தான் வருங்காலத்தில் குடும்பத்தையும் தன்னையும் காப்பாற்றிக்கொள்ள முடியும். ஆனால் பாலா சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் உதவி செய்கிறேன் என சொல்லி கொடுத்து விடுகிறார். அதனால் அவர் மனைவி பிள்ளைகளை எப்படி வருங்காலத்தில் காப்பாற்றுவார் என பெண் வீட்டார் கேள்வி கேட்கிறார்களாம்.
பாலா செய்து வரும் உதவி தற்போது அவரது சொந்த வாழ்க்கைக்கே பிரச்சனையாக மாறி இருக்கிறது. பெண் வீட்டாரை சமரசம் செய்ய பாலா முயற்சி செய்து வருகிறாராம்.

15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri
