KPY தீனாவிற்கு குழந்தை பிறந்தது, மகளை கையில் வாங்கிய அழகிய வீடியோ இதோ
KPY தீனா
சின்னத்திரையில் பிரபலமாகி அந்த மேடைகளை பயன்படுத்தி தங்களது திறமையை வெளிக்காட்டி வெளித்திரையில் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர்.
விஜய்யில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் முதலில் உதவி இயக்குனராக பணியாற்றி அதன்பின் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியவர் தான் தீனா.
நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானவர் போன் கால் மூலம் அதிகம் ரசிகர்களை கவர்ந்தார். நிறைய டைமிங், ரைமிங் கவுண்டர்கள் ஹிட்டடிக்க தொகுப்பாளர், சினிமா வாய்ப்புகள் அதிகம் பெற்றார்.
கைதி, பவர் பாண்டி, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

குழந்தை
சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வெற்றிக் கண்டவர் கடந்த 2023ம் ஆண்டு பிரகதி என்பவரை திருமணம் செய்துகெண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்த தீனாவிற்கு நவம்பர் 11ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. மகளை கையில் வாங்கிய தருணத்தை வீடியோவாக அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.