நாயகனாக புதிய படத்தில் கமிட்டாகியுள்ள KPY பாலா.. அவரே வெளியிட்ட முதல் பட அறிவிப்பு
KPY பாலா
தர்மபிரபு, மனிதக்கடவுள் என ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுபவர் KPY பாலா.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தான் இவரது அடையாளம் என்றால் இப்போது இவர் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார்.
ஓடி ஓடி உழைக்கிறார், அதைவிட வேகமாக யாருக்கெல்லாம் தனது உதவி தேவைப்படுகிறோ அவர்களுக்கு ஓடிப்போய் உதவிகள் செய்கிறார்.
இதெல்லாம் மற்றவர்களிடம் இருந்து பணம் வாங்கி செய்யாமல் தான் உழைக்கும் பணத்தில் செய்து வருகிறார்.

புதிய படம்
காமெடியனாக, தொகுப்பாளராக, கோமாளியாக என பன்முகம் காட்டிவந்த பாலா இப்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார். அதாவது முதன்முறையாக நாயகனாக பாலா புதிய படம் நடிக்க உள்ளாராம்.
ஷெரிப் இயக்கும் இப்படத்திற்கு விவேக் மெர்வின் தான் இசை. தற்போது ஃபஸ்ட் போஸ்டருடன் பாலா போட்ட பதிவு இதோ,
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri