மதியாதார் வாசலை மிதியாதே, குக் வித் கோமாளி ஷோ குறித்து KPY சரத் பதிவு... என்ன ஆனது?
குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி, தமிழ் சின்னத்திரையில் வெற்றியின் உச்சமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி. இந்த ஷோவின் முக்கிய கான்செப்ட் சமையல் என்றாலும் அதில் கோமாளிகள் செய்யும் காமெடிகள் தான் ஷோவின் ஹைலைட்டே.
ஆனால் இந்த 6வது சீசனில் கோமாளிகள் மட்டும் இல்லை, போட்டியாளர்கள், நடுவர்கள், தொகுப்பாளர், சிறப்பு விருந்தினர்கள் என அனைவருமே இந்த முறை மாஸ் காட்டிவிட்டார்கள்.
மக்களை சிரிக்க வைக்க என்னவெல்லாம் செய்யலாமோ அதை செய்தார்கள்.
சரத் பதிவு
சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி 6வது சீசன் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது.
6வது சீசனின் டைட்டில் வின்னராக ராஜு தேர்வாக, ஷபானா ரன்னர் அப்பாக வெற்றிப்பெற்றார். தற்போது இந்த நிகழ்ச்சி குறித்து கோமாளியாக கலக்கிய சரத் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில் அவர், எனக்கு இந்த விருது போதும் என முந்தைய சீசனில் வாங்கிய விருதை பதிவிட்டு அப்புறம் மக்களோட அன்பு, அந்த அவார்ட் போதும். இனிமேல் மதியாதார் வாசரை மிதியாதே என பதிவு செய்துள்ளார்.
நிகழ்ச்சியில் பலருக்கு விருது கிடைத்துள்ள நிலையில் இவரின் கடின உழைப்பு சரியாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது இவரது பதிவின் மூலம் தெரிகிறது. சரத் பதிவிற்கும் ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.