சமீபத்தில் பிறந்த தனது மகளின் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட KPY நவீன்- குவியும் லைக்ஸ்
KPY நவீன்
விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி இப்போது சாதிப்பவர்கள் நிறைய பேர். அதில் ஒருவர் தான் நவீன், நிறைய பிரபலங்களின் குரல்களில் மிமிக்ரி செய்வார் நவீன்.
இப்போது இவர் பாவம் கணேசன் என்ற தொடரில் நாயகனாக நடித்து வந்தார், ஆனால் இப்போது தொடரும் முடிவுக்கு வந்துள்ளது. அடுத்து எதில் நடிக்கிறார் என்ற விவரம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
பெண் குழந்தை
நவீனிற்கு ஏற்கெனவே ஒருவருடன் விவாகரத்து ஆன நிலையில் கிருஷ்ணகுமாரி என்பவரை மறுமணம் செய்துகொண்டார். சமீபத்தில் இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.
தனது மகளை நெஞ்சோடு வைத்து புகைப்படம் எடுத்து ஒரு அழகிய பதிவு போட்டுள்ளார் நவீன். இதோ
கணவர் அடித்த அடி கரு கலைய மருத்துவமனையில் சீரியல் நடிகை- கண்ணீருடன் அவரே வெளியிட்ட வீடியோ