KPY ராமர் செய்து வந்த தவறு, கெஞ்சி அழுத அவரது மகன்.... அதன்பிறகு நடந்த விஷயம்...
Kpy ராமர்
விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் KPY ராமர்.
அவரை மக்கள் நினைத்தாலே முதலில் நியாபகம் வருவது சொல்வதெல்லாம் பொய் மேலே வைக்காத கை என்ற காமெடி எபிசோடு தான். அந்நிகழ்ச்சிக்கு பிறகு ராமரை மக்கள் பெரிதாக கொண்டாட அவருக்கென தனி ஷோவையே விஜய் டிவி ஒதுக்கிறது.

ராமரை வைத்து ராமர் வீடு, சகள Vs ரகள, ராமர் வீட்டு கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது. 20 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில் கலக்கும் இவர் வெள்ளித்திரையிலும் சில படங்கள் நடித்தார்.
வேண்டுகோள்
எப்போதும், எல்லா நிகழ்ச்சிகளிலும் மக்களை சிரிக்க வைத்தவர் ஒரு நிகழ்ச்சியில் சோகமான விஷயத்தை பகிர்ந்துள்ளார், அதோடு மக்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் அவர், நிறைய பேர் தனது மனைவி, பிள்ளைகளை எல்லாம் மறந்துவிட்டு தனது சந்தோஷத்திற்காக குடிக்கிறார்கள், நானும் அப்படி இருந்தவன் தான்.
ஆனா என் பையன் என்னை கட்டிப்பிடித்து குடிக்காதீங்கப்பானு சொன்னான், அன்றில் இருந்து நான் குடிப்பதையே விட்டுவிட்டேன். தயவுசெய்து உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவாவது குடியை நிறுத்துங்கள் என வேண்டுகோள் வைத்துள்ளார்.
