புதிய வீடு வாங்கியுள்ள KPY சரத், நீண்டநாள் கனவு நிறைவேறிய தருணம்... போட்டோஸ் இதோ
கலக்கப்போவது யாரு
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் கலக்கிவரும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள்.
சிவகார்த்திகேயன், மணிகண்டன் போன்றவர்கள் எல்லாம் அங்கிருந்து வந்தவர்கள் தான். அப்படி இந்த கலக்கப்போவது யாரு என நிறைய விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்களில் ஒருவராக உள்ளார் சரத்.
புதிய வீடு
இவர் தற்போது சொந்தமாக புதிய வீடு வாங்கியுள்ளாராம்.
வீட்டிற்கு பூஜை போடும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து, 12 வருட போராட்டத்திற்கு பிறகு ஒரு இடத்தை எங்கள் வீடு என்று அழைக்கும் நாள் வந்துவிட்டது. அனைவருக்கும் நன்றி..
என்னுடன் உறுதுணையாக இருந்த என் துணை கிருத்திகா கிருஷ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி, லவ் யூ மா" என பதிவு போட்டுள்ளார். அவர் புதிய வீடு வாங்கியதற்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.