பிக் பாஸில் இன்று எலிமினேட் ஆன போட்டியாளர் இவர்தான்! உறுதியான தகவல்
பிக் பாஸ் அல்டிமேட் ஷோவை தற்போது சிம்பு தான் தொகுத்து வழங்கி வருகிறார். போட்டியாளர்கள் சுவாரஸ்யமாக விளையாடவில்லை என ரசிகர்கள் மட்டுமின்றி சிம்புவே தெரிவித்து வருகிறார்.
பிக் பாஸ் அல்டிமேட்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இன்னும் சுவாரஸ்யம் ஆக்குவதற்காக சமீபத்தில் விஜய் டிவி தீனா மற்றும் டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வீட்டுக்குள் வந்திருக்கின்றனர். அவர்கள் வந்த பிறகாவது ஷோவில் காமெடி ரசிக்கும்படி இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
எலிமினேட் ஆன சதிஷ்
இன்று ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் யார் எலிமினேட் ஆகி இருக்கிறார்கள் என்கிற விவரம் வெளியாகி இருக்கிறது. எதிர்பார்த்தது போல சதீஷ் தான் எலிமினேட் ஆகி இருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பு KPY புகழ் சதீஷ் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவுக்குள் வந்தார். அவர் காமெடியால் ரசிகர்களை கவர்வார் என எதிர்பார்த்தால், அவரோ எந்த டாஸ்க்கிலும் ஈடுபாட்டுடன் பங்கேற்கவில்லை.
மற்ற போட்டியாளர்கள் சீரியசாக போட்டிகளில் சண்டை போட்டுக்கொண்டிருந்தால் இவர் மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அது பற்றி சிம்புவே பலமுறை கூறியும் அவர் மாறவில்லை. இந்த நிலையில் தான் சதீஷ் எலிமினேட் ஆகி இருக்கிறார்.
மேலும் தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் ப்ரொமோவில் சிம்பு தான் போட்டியாளர்கள் அனைவரிடமும் கருத்துக்களை நேரடியாகவே செல்லப்போவதாக கூறி இருக்கிறார்.
#BBUltimate-இல் இன்று..
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) March 27, 2022
▶ 6:30 pm Onwards.. @SilambarasanTR_ #Day56 #Promo1 #NowStreaming only on #disneyplushotstar pic.twitter.com/H4HJf91pLf