பிக் பாஸ் வைல்டு கார்டாக வரும் விஜய் டிவி பிரபலம்: லேட்டஸ்ட் தகவல்
பிக் பாஸ் அல்டிமேட் ஷோ தற்போது 26வது நாளை தொட்டு இருக்கிறது. அதில் இருந்து வனிதா நேற்று திடீரென வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மறுபுறம் கமலுக்கு பதில் இந்த வாரத்தில் இருந்து சிம்பு தொகுப்பாளராக வர போகிறார் என்பதும் எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது இந்த வார இறுதியில் ஒரு புது போட்டியாளர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வர போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் டிவி KPY புகழ் சதீஷ் தான் வைல்டு கார்டு போட்டியாளராக வருகிறார்.
மற்ற போட்டியாளர்கள் முந்தைய சீசன்களில் பங்கேற்றவர்கள் என்ற நிலையில் இவர் மட்டும் முதல் முறையாக பிக் பாஸ் வீட்டுக்குள் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் பிரபலமான அவராவது பிக் பாஸ் அல்டிமேட் ஷோவை பரபரப்பாக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பிக் பாஸ் ரசிகர்கள் ஓவியா தான் வைல்டு கார்டு எண்ட்ரியாக வருவார் என எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது அவர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்து உள்ளது.