நான் 3 வேலை சாப்பிடுவதற்கு காரணமே மயில்சாமி அவர்கள் தான்.. எமோஷ்னல் ஆன பிரபலம்
மயில்சாமி
தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட காமெடி நடிகர்களில் ஒருவர் தான் மயில்சாமி.
தனித்துவமான உடல்மொழியுடன் காமெடி நடிகராக விவேக், வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ரஜினி, விஜய், விக்ரம் சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்திருக்கிறார்.
நடிப்பை தாண்டி தனது கை காசு எல்லாம் போட்டு உதவி என வருபவர்களுக்கு பண உதவியும், பசி என்பவர்களுக்கு சாப்பாடு இல்லை என கூறாமல் சாப்பாடு போட்டிருக்கிறார்.
கடந்த 2023ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
பிரபலம் ஓபன் டாக்
நடிகர் மயில்சாமி சினிமாவை தாண்டி மற்றவர்களுக்கு செய்த உதவி பற்றிய விஷயங்கள் இப்போது தான் அதிகம் பலர் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் KPY யோகி பேசும்போது, பசித்தவனுக்கு சாப்பிட மீன் குடுக்காத, அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுனு சொல்வாங்க. நான் இன்னைக்க சாப்பிடுற ஒவ்வொரு சாப்பாடும் மயில்சாமி அண்ணன் கொத்தது தான்.
1996ம் ஆண்டு சென்னைக்கு மயில்சாமி அண்ணனோட மிமிக்ரியை பார்த்து நானும் மிமிக்ரி செய்ய ஆரம்பிச்சேன் என கூறியுள்ளார்.