காந்தி கண்ணாடி படத்திற்காக KPY பாலா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
காந்தி கண்ணாடி
எந்த ஒரு நடிகருக்கும் தனது முதல் படம் என்றால் எப்போதும் ஸ்பெஷல் தான்.
அப்படி இப்போது தனது முதல் படம் வெளியான சந்தோஷத்திலும், நல்ல விமர்சனம் கிடைத்த கொண்டாட்டத்தில் உள்ளார் KPY பாலா.
விஜய் டிவி ஒரு அடையாளம் கொடுக்க அதை சரியான பாதையில் கொண்டு சென்று இப்போது மக்கள் கொண்டாடும் நாயகனாக வளர்ந்திருக்கிறார் பாலா.
காந்தி கண்ணாடி படத்தின் கதை என்றால், கதிர் என்ற இளம் Event Planner தனது வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை பெறுகிறார்.
காந்தி என்ற முதியவர் தனது 60வது திருமண ஆண்டு விழாவை நடத்தச் சொல்கிறார். அந்த கல்யாண நிகழ்வை வைத்து காதல், நம்பிக்கை மற்றும் சவால்களால் நிரம்பிய உணர்ச்சி பயணமாக கதை நகர்கிறது.

தமிழகத்தில் முதல் நாளில் சிவகார்த்திகேயனின் மதராஸி படம் செய்த மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சம்பளம்
தனது முதல் படத்தில் நடித்துள்ள பாலா காந்தி கண்ணாடி படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்று ஒரு கேள்வி சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
ஆனால் பாலா இந்த படத்திற்காக சம்பளம் வாங்கவில்லையாம். இதுகுறித்து அவரே ஒரு நிகழ்ச்சியில், என் வீட்டில் நான் கேட்டால் அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் கொடுப்பார்கள்.
என்னை வைத்து ஒரு தயாரிப்பாளர் கோடிக் கணக்கில் செலவு செய்து ஒரு படத்தை எடுத்திருக்கிறார். அவரிடம் போய் என்னுடைய சம்பளத்தை கொடுங்கள் என்று கேட்க மனம் இல்லை.
இந்த படம் எப்படியாவது வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, அதன்பின் கண்டிப்பாக எனக்கான சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுப்பார், நம்புகிறேன் என பாலா கூறியுள்ளார்.