க்ரித்தி ஷெட்டி அழகின் ரகசியம்.. அதை மட்டும் நான் சாப்பிடவே மாட்டேன்
நடிகை க்ரித்தி ஷெட்டி தெலுங்கி மட்டுமின்றி தற்போது தமிழிலும் பல படங்களில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் LIK, கார்த்தி உடன் வா வாத்தியார் உள்ளிட்ட படங்கள் அவர் கைவசம் இருக்கிறது.
மேலும் விரைவில் அவர் ஹிந்தியிலும் நடிக்க இருக்கிறார். விரைவில் க்ரித்தி ஷெட்டி Pan இந்தியா ஸ்டார் ஆக மாறுவார் என எதிர்பார்க்கலாம்.
அழகின் ரகசியம்
க்ரித்தி ஷெட்டிக்கு தற்போது 21 வயதாகிறது. அவரது அழகுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. தற்போது க்ரித்தி அளித்த பேட்டி ஒன்றில் தனது அழகின் ரகசியம் என்ன என்பது பற்றி கூறி இருக்கிறார்.
"நான் சர்க்கரை சாப்பிட மாட்டேன். சர்க்கரை எடுத்துக்கொள்ளாததால் எனது தோலில் பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அழகுசாதன பொருட்களை போட்டுக்கொள்வதற்கு விட இது ரொம்ப சிறப்பாக இருக்கிறது" என க்ரித்தி ஷெட்டி கூறி இருக்கிறார்.

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan
