LiK படத்தில் நடிக்க க்ரித்தி ஷெட்டி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?
க்ரித்தி ஷெட்டி
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் க்ரித்தி ஷெட்டி. இவர் தெலுங்கில் வெளிவந்த உப்பெண்ணா படத்தின் மூலம் முதன்முதலில் நடிகையாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.

இதன்பின், தமிழில் கஸ்டடி மற்றும் வா வாத்தியார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. ஆனால், Love insurance Kompany திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்று தரும் என எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த வாரம் வெளிவந்த இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து க்ரித்தி ஷெட்டி நடிக்க, விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்கியிருந்தார். காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனால், மூன்று நாட்களில் ரூ. 33 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பளம்
இந்த நிலையில், LiK திரைப்படத்தில் நடிக்க க்ரித்தி ஷெட்டி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்காக அவர் ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம். ஆனால், தனது முதல் படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 6 லட்சம் க்ரித்தி ஷெட்டி சம்பளமாக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
