க்ரித்தி ஷெட்டிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் முன்னணி ஹீரோவின் மகன்? உண்மை இதுதான்

By Parthiban.A Jul 07, 2023 08:40 AM GMT
Report

நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தென்னிந்தியாவில் இளைஞர்களை அதிகம் கவர்ந்த நடிகையாக இருந்து வருகிறார். அவர் வெங்கட் பிரபுவின் கஸ்டடி படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த நிலையில் அந்த படம் பெரிய அளவில் வரவேற்ப்பை பெறவில்லை.

அடுத்து அவர் ஜெயம் ரவி ஜோடியாக ஜீனி என்ற படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதன் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

க்ரித்தி ஷெட்டிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் முன்னணி ஹீரோவின் மகன்? உண்மை இதுதான் | Krithi Shetty Slams Fake News On Hero Son Torture

ஸ்டார் ஹீரோவின் மகன் தொல்லை கொடுக்கிறாரா?

க்ரித்தி ஷெட்டிக்கு ஒரு பிரபல ஹீரோவின் மகன் தொல்லை கொடுக்கிறார் என சமீபத்தில் ஒரு செய்தி பரவியது. அவர் எங்கு சென்றாலும் வந்து தொல்லை கொடுக்கிறார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் க்ரித்தி ஷெட்டி இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். "இது முற்றிலும் பொய்யான தகவல். இப்படி ஒரு செய்தியை முதலில் கண்டுகொள்ளாமல் தான் விட்டுவிட்டேன், ஆனால் இது எல்லைமீறி செல்கிறது" என க்ரித்தி ஷெட்டி தெரிவித்து இருக்கிறார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US