பிரபல நடிகரின் வீட்டிற்கு ரூ.10 லட்சம் வாடகையில் குடியேறும் நடிகை கீர்த்தி சனோன்.. ஆமா, யார் அந்த நடிகர்
பாலிவுட் திரையுலகில் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சனோன்.
இவர் நடிப்பில் சமீபத்தில் ஓடிடி-யில் வெளிவந்த மிமி படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் அப்படத்தில் இடம்பெற்ற பரம் சுந்தரி பாடல் சூப்பர்ஹிட்டானது.
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக அறியப்படுபவர் அமிதாப் பச்சன். இவருக்கு மும்பையின் பல்வேறு பகுதிகளில் சொந்த பங்களாக்கள் உள்ளன.
அதுமட்டுமின்றி இவருக்கு அந்தேரியின் மேற்கு பகுதியில் லோகண்ட் வாலா சாலையில் உள்ள அட்லாண்டிஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 27 மற்றும் 28 வது மாடியில் டூப்ளக்ஸ் வீடு அவருக்கு இருக்கிறது.
இந்நிலையில் தற்போது இந்த வீட்டை அவர் பிரபல இந்தி நடிகை கீர்த்தி சனானுக்கு வாடகைக்கு கொடுத்துள்ளாராம். அமிதாப் பச்சன் வீட்டில் வாடகைக்கு இருக்க, கீர்த்தி சனான் இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுளளதாம்.
முன்பதிவு தொகையாக ரூ. 60 லட்சமும், மாத வாடகையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri