கர்நாடகாவில் காத்து வாக்குல ரெண்டு காதல் பட வசூல் இவ்வளவா?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரபலமான நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்க கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல்.
பட பெயரே கொஞ்சம் கலகலப்பாக இருக்கிறது, முக்கியமாக இளைஞர்களை கவரும் வண்ணம் உள்ளது என்றே கூறலாம்.
படமும் ரிலீஸ் ஆக கொஞ்சம் கலவையான விமர்சனங்களை தான் பெற்ற வருகிறது, ஆனாலும் வசூலில் எந்த குறையும் இல்லை.

படத்தின் இரண்டு நாள் வசூல்
சென்னையில் முதல் நாளில் ரூ. 66 லட்சம் வசூலித்த படம் தமிழ்கத்தில் ரூ. 5 கோடி வரை வசூலித்திருந்தது. இரண்டு நாள் முடிவில் தமிழகத்தில் படம் ரூ. 8 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல் வந்தன.
தற்போது என்ன தகவல் என்றால் கர்நாடகாவில் 2 நாள் முடிவில் படம் ரூ. 50 லட்சம் வசூலித்துள்ளதாக அங்கிருக்கும் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
நடிகை சமந்தாவா இது, ரசிகர்களை மிரள வைக்கும் வீடியோ- என்ன செய்தார் பாருங்க