சூப்பர் சிங்கர் நடுவர் பாடகி சித்ராவின் மறைந்த மகள் நந்தனாவை பார்த்துள்ளீர்களா.. கண்கலங்க வைக்கும் புகைப்படம்
தனது அழகிய குரலின் மூலம் மக்கள் மனதை கொள்ளைகொண்டா பின்னணி பாடகி சின்னக்குயில் சித்ரா.
இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
சித்ரா அவர்கள் தற்போது புதிதாக துவங்கியுள்ள சூப்பர் சிங்கர் ஜூனியர் 8க்கு நடுவராக வந்துள்ளார்.
இந்த சீசன் மட்டுமின்றி இதற்கு முன் நடைபெற்ற ஜூனியர் சூப்பர் சிங்கரின் பல சீசன்களில் நடுவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னணி பாடகி சித்ரா, 1988ஆம் ஆண்டு விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நந்தனா என அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.
ஆனால், எதிர்பாராத விதமாக சித்ராவின் மகள் நந்தனா, நீச்சல் குளத்தில் விழுந்து இறந்துவிட்டார். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் இன்று தனது மகள் நந்தனாவின் பிறந்தநாள் ஆன இன்று, அழகிய புகைப்படத்தை பதிவு செய்து தனது மகளுக்கு வாழ்த்து கூறியுள்ளார் சித்ரா.
இதோ அந்த புகைப்படம்..