பின்னணி பாடகி சித்ராவிற்கு கோல்டன் விசா.. கௌரவத்தை வழங்கிய அரபு அமீரகம்
அமீரக அரசு கடந்த 2019ஆம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது.
இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் முக்கிய பிரபலங்கள் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது.
ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், மோகன்லால், மம்முட்டி, பிருத்விராஜ், துல்கர் சல்மான், தயாரிப்பாளர் போனி கபூர், உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு அமீரக அரசு, கோல்டன் விசா வழங்கியது.
அந்த வரிசையில் தற்போது பிரபல பின்னணி பாடகி சித்ராவுக்கும் கோல்டன் விசா வழங்கி உள்ளது.
கோல்டன் விசா பெற்ற போது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள சித்ரா, அமீரக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதோ..
So pleased honoured & privileged to receive the UAE Golden Visa from H.E.Major General Mohammad Ahmed Al Maari the chief of Dubai immigration today morning. pic.twitter.com/a1fPYv5Ncn
— K S Chithra (@KSChithra) October 20, 2021